/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சோத்துப்பாக்கம் கழிவுநீர் கால்வாயில் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

ADDED : ஆக 08, 2024 02:04 AM

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கம் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ளது. வந்தவாசி -- செய்யூர் மாநில நெடுஞ்சாலை மற்றும் சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆகியவை, சோத்துப்பாக்கம் ஊராட்சியை கடந்து செல்கின்றன.
இதனால், சோத்துப்பாக்கம் ஊராட்சியில், நாள்தோறும் புதிதாக ஹோட்டல்கள், டீக்கடைகள் மற்றும் சிறு வணிக வளாகங்கள் அமைகின்றன. சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம், கழிவுநீர் விரைந்து வெளியேறும் வகையில், சிமென்ட் கான்கிரீட்டால் மூடி அமைப்புடன் கூடிய கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாய், தனியார் திருமண மண்டபம் அருகே நிறைவடைகிறது. கழிவுநீர் கால்வாய் முடியும் இடத்தில், காலி நிலம் உள்ளது. இப்பகுதியில், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் கோழி இறைச்சி கழிவுகளை, கழிவுநீர் கால்வாயில் கொட்டுகின்றனர்.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, அப்பகுதியில் கழிவுகளை கொட்டுவோரை கண்டறிந்து, அபராதம் விதிக்க வேண்டும்.
துறை சார்ந்த ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள், கழிவுகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.