/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் பகுதிகளில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு
/
அச்சிறுபாக்கம் பகுதிகளில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு
அச்சிறுபாக்கம் பகுதிகளில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு
அச்சிறுபாக்கம் பகுதிகளில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு
ADDED : செப் 04, 2024 02:03 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 6வது வார்டு நேரு நகர், 7வது வார்டு ஜின்னா நகர் பகுதிகளில், பன்றிகள் அதிக அளவில் உலா வருகின்றன.
ஹோட்டல் உணவு கழிவுகள், காய்கறி கழிவுகள் போன்றவற்றை உண்ணுவதற்காக, சாலை பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.
நேரு நகர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான காலியிடங்களில் உள்ள முட்புதர்கள், பன்றிகளின் தங்கும் இடமாக உள்ளன.
காலை, மாலை நேரங்களில், சாலைகளில் உலா வரும் பன்றிகளால், இருசக்கர வாகனத்தில் செல்வோர், கீழே விழுந்து அடிபடுகின்றனர்.
கழிவுநீர் தேங்கியுள்ள பகுதிகளில் பன்றிகள் கிளறி விடுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.