/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தடுப்பணை நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி
/
தடுப்பணை நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி
ADDED : மே 25, 2024 10:57 PM
சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தைச் சேர்ந்த சிதம்பரம் மகன் மகேஷ்வரன், 17. இப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
நேற்று பகல் 12:00 மணிக்கு நண்பர்களுடன், வாயலுார் தடுப்பணை நீர்த்தேக்கத்தில் குளித்து கொண்டிருந்தார். நீச்சல் தெரியாத நிலையில், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமானார்.
தகவல அறிந்து வந்த திருக்கழுக்குன்றம் தீயணைப்பு வீரர்கள், மாலை 3:45 மணிக்கு உடலை மீட்டு, சதுரங்கப்பட்டினம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின், சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.