/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு இன்று இரண்டாம் கட்ட பயிற்சி
/
ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு இன்று இரண்டாம் கட்ட பயிற்சி
ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு இன்று இரண்டாம் கட்ட பயிற்சி
ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு இன்று இரண்டாம் கட்ட பயிற்சி
ADDED : ஏப் 07, 2024 06:37 AM
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகளில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, இன்று இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதிகளில், லோக்சபா தேர்தலையொட்டி மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, இன்று இரண்டாம் கட்ட பயிற்சி நடக்கிறது. இதில், ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கபட உள்ளன.
சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதிக்கு, துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லுாரி, எம்.என்.எம்.பொறியியல் கல்லுாரி, பல்லாவரம் சட்டசபை தொகுதிக்கு, பல்லாவரம் கண்டோன்மென்ட் புனித தெரேசா மேல்நிலைப் பள்ளி, தாம்பரம் சட்டசபை தொகுதிக்கு, கிழக்கு தாம்பரம் ஜெயகோபால் கரோடியோ நேஷனல் மேல்நிலைப் பள்ளி.
செங்கல்பட்டுசட்டசபை தொகுதிக்கு, செங்கல்பட்டு புனிதமேரி மேல்நிலைப் பள்ளி, திருப்போரூர் சட்டசபை தொகுதிக்கு, திருப்போரூர் அடுத்த பையனுார் அறுபடைவீடு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி.
செய்யூர் - தனி சட்டசபை தொகுதிக்கு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரி, மதுராந்தம் - தனி சட்டசபை தொகுதிக்கு அச்சிறுப்பாக்கம் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி ஆகிய பயிற்சி மையங்களில் நடக்கிறது.
இந்த மையங்களில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கான அஞ்சல் ஓட்டுகள் செலுத்த, வாக்காளர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது என, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் தெரிவித்தார்.

