/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொட்டமேடு ஊராட்சியில் ரூ.40 லட்சத்தில் செயலகம்
/
கொட்டமேடு ஊராட்சியில் ரூ.40 லட்சத்தில் செயலகம்
ADDED : ஆக 14, 2024 10:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கொட்டமேடு ஊராட்சி பகுதியில் பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் சேவைகள் பெற வரும் நிலையில், போதிய இட வசதியில்லை. நிர்வாக கோப்புகளை பாதுகாப்பாக வைக்க இயலவில்லை.
எனவே, வட்டார வளர்ச்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றுக்காக, 39.95 லட்சம் ரூபாய் மதிப்பில், கிராம செயலகமாக மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 39.95 லட்சம் ரூபாய் மதிப்பில், கிராம செயலக கட்டடம், தற்போது கட்டப்பட்டுள்ளது.