/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேலையூர் லட்சுமி அவென்யூ லேசான மழைக்கே தத்தளிப்பு
/
சேலையூர் லட்சுமி அவென்யூ லேசான மழைக்கே தத்தளிப்பு
ADDED : ஜூலை 15, 2024 06:15 AM
சேலையூர் : தாம்பரம் மாநகராட்சி, ஐந்தாவது மண்டலம், 65வது வார்டு, சேலையூர், லட்சுமி அவென்யூ பகுதியில், ஐந்து தெருக்கள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் மழைநீர் கால்வாய் இல்லை; சாலையும் அமைக்கப்படவில்லை.
லேசான மழை பெய்தாலே, ஐந்து தெருக்களிலும் முழங்கால் அளவிற்கு வெள்ளம் தேங்கி விடுகிறது. அதுபோன்ற நேரங்களில், மக்கள் வெளிய வர அச்சப்பட்டு, வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
கடந்த ஆண்டு வெள்ளத்தில், இப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். ஒவ்வொரு மழைக்கும் இப்பிரச்னை நீடிப்பதால், அப்பகுதியில் சாலையை சீரமைத்து கால்வாய் கட்ட வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இக்கோரிக்கையை, அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
இதனால், சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் மழையில், இப்பகுதியில் வழக்கம் போல் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கி, பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, லட்சுமி அவென்யூ பகுதியில் மழைநீர் கால்வாய் அமைத்து, வெள்ளம் தேங்குவதை தடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.