/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூஞ்சேரி மேம்பால இணைப்பிற்கு சர்வீஸ் சாலை பணிகள் தீவிரம்
/
பூஞ்சேரி மேம்பால இணைப்பிற்கு சர்வீஸ் சாலை பணிகள் தீவிரம்
பூஞ்சேரி மேம்பால இணைப்பிற்கு சர்வீஸ் சாலை பணிகள் தீவிரம்
பூஞ்சேரி மேம்பால இணைப்பிற்கு சர்வீஸ் சாலை பணிகள் தீவிரம்
ADDED : செப் 03, 2024 05:02 AM

மாமல்லபுரம்: மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிப்பாதையாக மேம்படுத்தும் பணிகள், கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவக்கப்பட்டது.
மாமல்லபுரம் - முகையூர் இடையே, முதல் கட்டமாக, 32 கி.மீ.,க்கு, இப்பணிகள் நடக்கின்றன. இத்தடத்துடன், பிற சாலைகள் குறுக்கிடும் இடங்களில், மேம்பாலங்கள், வாய்க்கால் குறுக்கிடும் இடங்களில் சிறிய பாலங்கள் கட்டி, சாலை அமைக்கப்படுகிறது.
மாமல்லபுரத்தில், புறவழிப்பாதை துவங்குமிடம், பூஞ்சேரி சந்திப்பு ஆகிய இடங்களில், புதுச்சேரி, சென்னை தட வாகனங்கள், இடையூறின்றி நேரடியாக கடக்க மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை கட்டி முடித்து பல மாதங்களான நிலையில், கிராவல் மண் கிடைக்காத சிக்கலால், அணுகு பாதை அமைப்பது தாமதமானது.
தற்போது, ஏரிகளில் மண் எடுக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.இதையடுத்து, பூஞ்சேரி மேம்பாலத்தை இணைக்கும் சாலைக்காக மண் நிரப்பி, இருபுறமும் பக்கவாட்டு கான்கிரீட் தடுப்பு பலகை அமைத்து, அணுகுசாலை அமைக்கப்படுகிறது.
பாலத்தின் இருபுறமும், சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடக்கின்றன. இப்பால பணிகளை முடித்து, மாமல்லபுரம் புறவழி மேம்பால இணைப்பு பணிகள் துவக்கப்படும் என, ஒப்பந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர்.