/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நந்திவரம் நாராயணபுரத்தில் சாலையில் கழிவுநீர் தேக்கம்
/
நந்திவரம் நாராயணபுரத்தில் சாலையில் கழிவுநீர் தேக்கம்
நந்திவரம் நாராயணபுரத்தில் சாலையில் கழிவுநீர் தேக்கம்
நந்திவரம் நாராயணபுரத்தில் சாலையில் கழிவுநீர் தேக்கம்
ADDED : ஆக 07, 2024 02:23 AM

கூடுவாஞ்சேரி,
நந்திவரம், நாராயணபுரம் பிரதான சாலையில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், அப்பகுதிவாசிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
நாராயணபுரம் பிரதான சாலையில், கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளது. கால்வாய் எதிரே உள்ள வீட்டில் இருந்து, வீட்டின் உரிமையாளர் கழிவு நீரை வெளியேற்ற, கால்வாய்க்கு குழாய் அமைத்து, கழிவு நீரை விடாமல் சாலையில் விடுகிறார்.
அது, அப்பகுதியில்தேக்கம் அடைந்து, சுற்றுப்புற பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
இந்த சாலையை பயன்படுத்தி, பள்ளி செல்லும் மாணவ- - மாணவியர் மற்றும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர் என, தினமும் 1,000க்கும் மேற்பட்டோர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, கால்வாயில் கழிவுநீரை விடாமல், வேண்டுமென்றே சாலையில் விடும் வீட்டின் உரிமையாளர் மீது, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.