/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் சாலை பணி மந்தம் வாகன ஓட்டிகள் அவஸ்தை
/
செய்யூர் சாலை பணி மந்தம் வாகன ஓட்டிகள் அவஸ்தை
ADDED : ஜூலை 28, 2024 01:57 AM

செய்யூர்:செய்யூர் அருகே செய்யூர் - ஆற்காடு இடையே செல்லும், 7 கிலோமீட்டர் தார்ச்சாலை உள்ளது. இச்சாலையை சித்தாற்காடு, பாளையூர், தண்ணீர்பந்தல், வெடால், அமந்தங்கரணை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக சாலை பழுதடைந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு இருந்ததால், பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய வேலைக்கு செல்வோர் கடும் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 2022 - 23ம் ஆண்டு முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 87.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பாளையூர் முதல் தண்ணீர்பந்தல் சாலை வரை 1.53 கிலோ மீட்டர் சாலை சீரமைக்கும் பணி கடந்தாண்டு துவக்கப்பட்டது.
சிறுபாலங்கள் அமைக்கப்பட்டு பணி கிடப்பில் போடப்பட்ட நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன் பணி துவக்கப்பட்டு, பழைய சாலையில் இருந்த ஜல்லிக்கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் சாலை சீரமைக்கும் பணி நிறுத்தப்பட்டதால், சாலையில் உள்ள ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோர், ஜல்லிக்கற்களால் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.