/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிமென்ட் கல் தட்டுப்பாடு சிறுநகரில் சாலை பணி மந்தம்
/
சிமென்ட் கல் தட்டுப்பாடு சிறுநகரில் சாலை பணி மந்தம்
சிமென்ட் கல் தட்டுப்பாடு சிறுநகரில் சாலை பணி மந்தம்
சிமென்ட் கல் தட்டுப்பாடு சிறுநகரில் சாலை பணி மந்தம்
ADDED : ஜூலை 27, 2024 01:17 AM

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த சிறுநகர் ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகர் கோவில் தெருவில், 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை இருந்தது.
நாளடைவில், சிமென்ட் சாலை சேதமடைந்ததால், சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 180 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி, கடந்த மாதம் துவங்கப்பட்டது. பழைய சிமென்ட் சாலை அகற்றப்பட்டு, 100 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டது.
சிமென்ட் கல் பற்றாக்குறையால், மீதமுள்ள 80 மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டாமல் நிறுத்தப்பட்டது. இதனால், சாலையில் நிரவப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால் அப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வட்டார உதவி பொறியாளர் கூறியதாவது:
சிமென்ட் கல் தட்டுப்பாடு காரணமாக, சாலை அமைக்கும் பணி, கடந்த சில தினங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. உடனே, சிமென்ட் கல் வாங்கப்பட்டு, அடுத்த சில நாட்களில், சாலை முழுதும் அமைக்கப்பட்டு, அடுத்த வாரம் பணிகள் நிறைவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.