/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிக்னல், பசுமை பூங்கா பணி செங்கல்பட்டில் துவக்கம்
/
சிக்னல், பசுமை பூங்கா பணி செங்கல்பட்டில் துவக்கம்
ADDED : மார் 15, 2025 01:39 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், சாலை சந்திப்புகளில் பசுமை பூங்கா, 'சிக்னல்' அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் பகுதியில், செங்கல்பட்டு - பொன்விளைந்தகளத்துார் சாலை சந்திப்பு மற்றும் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் பகுதியில், செங்கல்பட்டு - மணப்பாக்கம் சாலையில், ஒழலுார் சந்திப்புகள் உள்ளன. இப்பகுதிகளில், அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன.
இதைத் தவிர்க்க, சாலை சந்திப்புகளில் 'சிக்னல்' அமைக்க வேண்டும் என, அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறையினரிடம், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன் பின், மேற்கண்ட பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, பூங்கா மற்றும் சிக்னல் அமைக்க, அரசுக்கு கருத்து அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில், சாலை பாதுகாப்பிற்காக, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது.
இப்பணிக்கு, 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரருக்கு நெடுஞ்சாலைத் துறையினர் பணி ஆணை வழங்கினர்.
அதன் பின், பொன்விளைந்தகளத்துார் சாலை, ஒழலுார் சாலை ஆகிய பகுதிகளில், பசுமை பூங்கா அமைப்பதற்காக இடத்தை தேர்வு செய்து, பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம் பகுதிகளில், சாலை சந்திப்புகளில் பசுமை பூங்கா மற்றும் சிக்னல் அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, நான்கு மாதங்களில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.