/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருத்தேரி சந்திப்பில் சிக்னல் ரூ.7.50 லட்சம் நிதி ஒதுக்கீடு
/
திருத்தேரி சந்திப்பில் சிக்னல் ரூ.7.50 லட்சம் நிதி ஒதுக்கீடு
திருத்தேரி சந்திப்பில் சிக்னல் ரூ.7.50 லட்சம் நிதி ஒதுக்கீடு
திருத்தேரி சந்திப்பில் சிக்னல் ரூ.7.50 லட்சம் நிதி ஒதுக்கீடு
ADDED : ஆக 04, 2024 11:38 PM
மறைமலை நகர்:திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை.
இந்த சாலையில், கூடுவாஞ்சேரி -- மகேந்திரா சிட்டி வரை எட்டு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளில், இந்த சாலையில் திருத்தேரி சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் மற்றும் பலர் உடலுறுப்புகளை இழந்தனர்.
திருத்தேரி சந்திப்பில் சிக்னல் அமைக்க வேண்டும் என, சிங்கபெருமாள் கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள், நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
கடந்த ஆண்டு, இந்த பகுதியில் ஏற்பட்ட விபத்தின் போது, சாலை மறியல் மற்றும் போராட்டம் உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்த பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் சப் - கலெக்டர் நாராயணசர்மா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகள் குறித்து ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை அளித்தனர்.
அதன்படி, தற்போது திருத்தேரி பகுதியில் சிக்னல் அமைக்க, போக்குவரத்து காவல் துறை சார்பில், சாலை பாதுகாப்பு நிதியின் கீழ், 7 லட்சத்து 46ஆயிரத்து 900 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. முறையாக டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.