/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவிலுக்கு வெள்ளிக்குடை காணிக்கை
/
கந்தசுவாமி கோவிலுக்கு வெள்ளிக்குடை காணிக்கை
ADDED : ஜூலை 28, 2024 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பக்தரான சென்னையை சேர்ந்த வெங்கட், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வெள்ளிக்குடையை காணிக்கையாக வழங்க முடிவு செய்தார்.
அதன்படி, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3.8 கிலோ எடையுள்ள வெள்ளிக்குடையை புதிதாக தயார் செய்து, கந்தசுவாமி கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார்.
முன்னதாக, கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து, காணிக்கையாக வழங்க உள்ள வெள்ளிக் குடையை வைத்து வழிபாடு செய்தனர்.
இந்த வெள்ளிக் குடை, விசேஷ நாட்களில் உட்பிரகார உலாவின்போது பயன்படுத்தப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.