/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சார் - பதிவாளர் அலுவலகம் திறப்பு விழாவிற்கு காத்திருப்பு
/
சார் - பதிவாளர் அலுவலகம் திறப்பு விழாவிற்கு காத்திருப்பு
சார் - பதிவாளர் அலுவலகம் திறப்பு விழாவிற்கு காத்திருப்பு
சார் - பதிவாளர் அலுவலகம் திறப்பு விழாவிற்கு காத்திருப்பு
ADDED : ஆக 22, 2024 12:07 AM

திருக்கழுக்குன்றம்,:திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதியினரின் நிலம், வீட்டுமனை பத்திரப்பதிவு, திருமண பதிவு ஆகியவற்றுக்காக, திருக்கழுக்குன்றத்தில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்குள்ள கம்மாளர் தெரு பகுதியில், நுாற்றாண்டு பழமையான கட்டடத்தில் அதற்கான அலுவலகம் இயங்கியது.
திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் பத்திரப்பதிவு அதிகரிக்கும் நிலையில், பழமையான, குறுகிய கட்டடத்தில் இயங்குவதால், இடநெருக்கடி ஏற்பட்டது. இங்கு வந்துசெல்லும் பொதுமக்களுக்கு, அடிப்படை வசதிகள் கூட இல்லை.
எனவே, புதிய அலுவலக கட்டடம் கட்ட, பத்திர பதிவுத்துறை முடிவெடுத்தது. தற்போது, அதே தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு, கடந்த ஆண்டு செப்.,ல் அலுவலகம் மாற்றப்பட்டு, ஓராண்டாக வாடகைக்கு இயங்குகிறது.
பழைய அலுவலக கட்டடத்தை இடித்து, 1.35 கோடி ரூபாய் மதிப்பில், கீழ், மேல் ஆகிய தளங்களுடன் புதிய அலுவலகம் கட்டப்பட்டது. இக்கட்டடம் கட்டி பல மாதங்களாகியும், தற்போது வரை திறக்கப்படாமல், திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
எனவே, புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டடத்தை திறந்து, விரைவில் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.