/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?
/
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?
ADDED : ஆக 29, 2024 01:33 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி, பஜார் வீதியில் சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது. அங்கு, 1936-ல் சார் - பதிவாளர் அலுவலகம் செயல்படத் துவங்கியது.
இது, 90 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டடம். தற்போது, இக்கட்டடம் மிகவும் பழமையானதால், மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்படுகிறது.
சாலையின் உயரத்தைக் காட்டிலும், பதிவாளர் அலுவலகம் தாழ்வாக உள்ளதால், மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், ஆவணங்களை பாதுகாப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது.
போதிய இடவசதி இல்லாததால், பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் மக்கள், அமருவதற்கு இருக்கை வசதி இன்றி நின்றபடியே காத்திருக்கின்றனர்.
எனவே, தற்காலிகமாக சார் - பதிவாளர் அலுவலகத்தை மாற்று இடத்தில் அமைத்து, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே பகுதியில், புதிய கட்டடம் அமைக்க, உரிய துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.