/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுபேர்பாண்டி வி.ஏ.ஓ., ஆபீஸ் கட்டடம் சிதிலமடைந்து பாழ்
/
சிறுபேர்பாண்டி வி.ஏ.ஓ., ஆபீஸ் கட்டடம் சிதிலமடைந்து பாழ்
சிறுபேர்பாண்டி வி.ஏ.ஓ., ஆபீஸ் கட்டடம் சிதிலமடைந்து பாழ்
சிறுபேர்பாண்டி வி.ஏ.ஓ., ஆபீஸ் கட்டடம் சிதிலமடைந்து பாழ்
ADDED : ஜூலை 29, 2024 11:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுபேர்பாண்டி ஊராட்சியில், கிராம நிர்வாக அலுவலக கட்டடம் உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கட்டடம் என்பதால், சிதிலமடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்புகம்பிகள் வெளியேதெரிகின்றன.
இதனால், மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகுகிறது. அதனால், கிராமநிர்வாக பதிவேடுகள், ஆவணங்களை பாதுகாப்பதில் பெரும் சிரமமாக உள்ளது.
எனவே, பழையகட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும்அதே பகுதியில் கிராம நிர்வாக அலுவலககட்டடம் அமைத்து தர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.