/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சீதா கல்யாண வைபவம் ஊரப்பாக்கத்தில் விமரிசை
/
சீதா கல்யாண வைபவம் ஊரப்பாக்கத்தில் விமரிசை
ADDED : மே 07, 2024 11:49 PM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி ரேவதிபுரம் பிரதான சாலையில், சங்கர பக்த ஜன சபா உள்ளது. அங்கு, உலக நன்மைக்காக, சீதா கல்யாண வைபவம் நிகழ்ச்சி, நடந்தது.
கல்யாண வைபோகத்தை முன்னிட்டு, தோடய மங்களம், குரு கீர்த்தனை, அஷ்டபதி, அஷ்டபதி தொடர்ச்சி, தரங்கம், பஞ்சபதி கீர்த்தனைகள், பூஜை, தேவதா தியானங்கள், திவ்ய நாம சங்கீர்த்தனம், டோலோத்ஸவம், சம்பிரதாய உஞ்சவ்ருத்தி, பவ்வளிப்பு உற்சவம், வசந்த கேளிக்கை, ஆஞ்சநேய உற்சவம், ஆரத்தி ஆகியவை நடந்தன.
சீதா கல்யாண வைபவத்தை, தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பாகவதர் குழுவினர் நடத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஊரப்பாக்கம் சங்கர பக்த ஜன சபா நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று, நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

