/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கேளம்பாக்கம் - தையூர் இடையே ஆறுவழி சாலை பணிகள் தீவிரம்
/
கேளம்பாக்கம் - தையூர் இடையே ஆறுவழி சாலை பணிகள் தீவிரம்
கேளம்பாக்கம் - தையூர் இடையே ஆறுவழி சாலை பணிகள் தீவிரம்
கேளம்பாக்கம் - தையூர் இடையே ஆறுவழி சாலை பணிகள் தீவிரம்
ADDED : ஏப் 17, 2024 10:43 PM

திருப்போரூர்:சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து, சிறுசேரி சிப்காட் வரை ஆறுவழிப் பாதையாகவும், சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை நான்குவழிப் பாதையாகவும், ஓ.எம்.ஆர்., சாலை உள்ளது.
எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக பூஞ்சேரி வரை, உயர்மட்டச் சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
இதில், படூர் -- தையூர் இடையிலான புறவழிச் சாலை, 4.67 கி.மீ., துாரத்திற்கும், திருப்போரூர் -- ஆலத்துார் இடையிலானபுறவழிச்சாலை, 7.45 கி.மீ., துாரத்திற்கும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இரண்டு புறவழிச் சாலைகளுக்கும் சேர்த்து, மொத்தம் 465 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில், படூர் -- தையூர் சாலைக்காக, கேளம் பாக்கம் வழியாக பணி நடக்கிறது.
இந்த புறவழிச்சாலையின் குறுக்கே, கேளம்பாக்கம்- - கோவளம் சாலை வருவதால், அங்கு உயர்மட்ட மேம்பாலம்அமைக்கப்பட்டுள்ளது. பாலப் பணிகள் முடிந்த நிலையில், புறவழிச் சாலையை அந்த பாலத்துடன் இணைக்கும் பணிகள்நடந்து வருகின்றன.
அதேபோல், கேளம்பாக்கத்தில் இருந்து தையூர் வரையிலான சாலை பணி தொய்வாக நடந்து வந்தது.
கேளம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசலை தடுக்க, சாலை அமைக்கும்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
அதன் தொடர்ச்சியாக, கேளம்பாக்கம்- - தையூர் ஆறுவழிச்சாலை பணிகள் மீண்டும் துவங்கி தீவிரமாகநடந்து வருகிறது.

