sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

/

கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி


ADDED : ஆக 28, 2024 08:48 PM

Google News

ADDED : ஆக 28, 2024 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டதில், கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் பங்கேற்று பயனடையலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு, தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி, நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. இப்பயிற்சி, மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை வழங்கப்படும். உணவு, தங்குமிட வசதி, சீருடை, பயிற்சி உபகரணங்கள், கணினி பயிற்சி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.

பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்க: அச்சிறுபாக்கம் 63743 83996, மதுராந்தகம் 99409 77470, சித்தாமூர் 73051 35173, லத்துார் 97518 12387, திருக்கழுக்குன்றம் 80981 07546, திருப்போரூர் 96597 44962, காட்டாங்கொளத்துார் 6379289417, புனிததோமையார்மலை 90927 84939.

கிராமப்புற பகுதியைச் சேர்ந்த இருபாலரும், தங்களின் கல்வித்தகுதிக்கேற்ப, விருப்பமான தொழில் பிரிவை தேர்வு செய்து, பயிற்சி பெற்று பயனடையலம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us