/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் குறுகிய வாடகை இடத்தில் இயங்கும் அவலம்
/
பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் குறுகிய வாடகை இடத்தில் இயங்கும் அவலம்
பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் குறுகிய வாடகை இடத்தில் இயங்கும் அவலம்
பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் குறுகிய வாடகை இடத்தில் இயங்கும் அவலம்
ADDED : ஜூலை 31, 2024 11:48 PM

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் வாழும் பழங்குடி இருளர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதியில், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் இயங்குகிறது. அதன் உறுப்பினர்களாக இருளர்கள் உள்ளனர்.
துவக்க காலம் முதல், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள, தனியார் முதலை பண்ணை வளாகத்தில், 25,000 ரூபாய் மாத வாடகைக்கு, சங்க வளாகம் இயங்குகிறது.
குறுகிய இடத்தில் சங்கம் இயங்குவதால், 50 சென்டிற்கும் குறைவான இடத்தில் தான், மண் பானைகளில் பாம்புகள் பாதுகாக்கப்படுகின்றன. விஷம் எடுக்கப்படுகிறது.
சங்கத்திற்கு, குறைந்தபட்சம் 2 ஏக்கர் இடம் தேவை. வர்த்தக சார்பான சங்கம் என்பதால், அரசிடம் இலவச இடம் பெற இயலாது. சங்கம் நிதி ஆதாரம் இன்றி, சொந்த இடம் வாங்கவும் இயலாது.
அதனால், குறுகிய இடத்தில் இயங்கி, சங்கத்தின் வளர்ச்சி, இருளர் முன்னேற்றம் முடங்குகிறது. இருளர் கூட்டுறவு சங்கம் என்பதை அரசு பரிசீலித்து, சங்கத்திற்கு நிரந்தர இடம் வழங்க, அரசிடம் வலியுறுத்தப்படுகிறது. அரசு முடிவெடுக்காமல் இழுத்தடிக்கிறது.
இதுமட்டுமின்றி, தொழில், வனம் ஆகிய துறைகளின் குளறுபடிகளால், குறிப்பிட்ட காலத்தில் பாம்பு பிடிக்கவும் அனுமதி அளிப்பதில்லை.
முன், டிசம்பர் மாதமே அனுமதித்த தொழில் துறை, தற்போது தடைக்கால துவக்கத்தில் தான் அனுமதியே அளிக்கிறது. குறைவான பாம்புகளே பிடிக்க முடிவதால், தொழில் முடங்குகிறது. இருளர் வருவாய் இழந்து பாதிக்கப்படுகின்றனர்.
சங்கத்திற்கு சொந்த இடமில்லை. இதற்காக இடம் அளிக்க, அரசிடம் பல ஆண்டுகளாக வலியுறுத்துகிறோம். கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், அரசிடம் உள்ள நிலத்தை அளித்தால், சங்கத்திற்கு ஏற்றதாக இருக்கும். அரசு முடிவெடுத்து, இடம் அளிக்கும் என, எதிர்பார்த்துள்ளோம்.
- நிர்வாகிகள்
பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம், வடநெம்மேலி