/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
/
சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : செப் 07, 2024 07:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம் : மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழவலம் ஊராட்சியில், நேற்று சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம், சேவை மைய வளாக கட்டடத்தில் நடந்தது.
இதில், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து ஒன்றிய பொறியாளர் சுஜித்ரா தலைமையில், குழுவினர் பங்கேற்றனர். அப்போது, 2023 - 24ம் ஆண்டுக்கான, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில், சமூக தணிக்கை செய்தனர்.
இதில், ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி பொதுமக்கள் பங்கேற்றனர்.