/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தென் மாநில வாலிபால் எஸ்.ஆர்.எம்., சாம்பியன்
/
தென் மாநில வாலிபால் எஸ்.ஆர்.எம்., சாம்பியன்
ADDED : ஜூன் 25, 2024 05:28 AM

சென்னை, ; கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூரில், தென் மாநில வாலிபால் போட்டி, கடந்த 21ல் துவங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து, எஸ்.ஆர்.எம்., - ஜேப்பியார், கேரளா அஸ்சூம்சன் மற்றும் பனிமலர் என, நான்கு கல்லுாரி அணிகள், 'லீக்' முறையில் மோதின.
பெண்களுக்கான இப்போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி, 25 - 22, 15 - 25, 25 - 20, 25 - 19 என்ற கணக்கில் பனிமலர் அணியையும், 25 - 20, 25 - 16, 20 - 25, 25 - 21 என்ற கணக்கில் அஸ்சூம்சன் அணியையும் தோற்கடித்தது.
அனைத்து போட்டிகள் முடிவில், புள்ளிகள் அடிப்படையில், சென்னை எஸ்.ஆர்.எம்., அணி முதலிடத்தையும், ஜேப்பியார் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
கேரளா அஸ்சூம்சன் மற்றும் சென்னை பனிமலர் அணிகள், மூன்று மற்றும் நான்காம் இடங்களை வென்றன. போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக, எஸ்.ஆர்.எம்., மாணவி கோபிகா தேர்வு செய்யப்பட்டார்.