/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை திருநங்கையருக்கு வரும் 18ல் சிறப்பு முகாம்
/
செங்கை திருநங்கையருக்கு வரும் 18ல் சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 14, 2024 12:11 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், திருநங்கையருக்கான பல்வேறு நலத்திட்ட சேவைகளை வழங்குவதற்கான சிறப்பு முகாம், வரும் 18ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், திருநங்கையருக்காக, ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
இதனால், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அதனால்,செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில், திருநங்கையருக்கான சிறப்பு முகாம், வரும் 18ம் தேதி நடக்கிறது. அவர்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.