sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை முதல்வர் வருகை சிறப்பு மலர்

/

செங்கை முதல்வர் வருகை சிறப்பு மலர்

செங்கை முதல்வர் வருகை சிறப்பு மலர்

செங்கை முதல்வர் வருகை சிறப்பு மலர்


ADDED : மார் 10, 2025 11:38 PM

Google News

ADDED : மார் 10, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு பெயர்க்காரணம்


செங்கல்பட்டு நீர்நிலைகளில், செங்கழுநீர் பூக்கள் அதிகமாக காணப்பட்டதால் செங்கழுநீர்பட்டு என்று அழைக்கப்பட்டது. பின்னர், இதுவே மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படுகிறது.

கி.பி., முதலாம் நுாற்றாண்டில், காஞ்சிபுரம் தொண்டைமான் மரபினர் நிர்வகித்ததாக கருத்தப்படுகிறது. இந்நுாற்றாண்டின் இறுதியில், பல்லவர்கள் ஆட்சி புரிய துவங்கினர்; 10ம் நுாற்றாண்டு வரை, பல்லவர்களே, இப்பகுதியை ஆண்டனர்.

பின், 13ம் நுாற்றாண்டு வரை, சோழர்களும்; 13 - 17ம் நுாற்றாண்டு வரை, விஜயநகர பேரரசர்களும் ஆண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலத்தில், 1788ல், செங்கல்பட்டு மாவட்டம் முதன் முதலாக உதயமானது. தற்போதைய காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டமாக, 1793 முதல் 1997 வரை அமைந்திருந்தது.

செங்கல்பட்டு தலைநகராக மதுராந்தகம் அடுத்த கருங்குழி இருந்தது. இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம், சென்னையின் சைதாப்பேட்டை ஆகிய பகுதிகள் தலைநகராக இருந்தன.

திராவிடர் காலமான 1968ல் முதல்வராக இருந்த அண்ணாதுரை, செங்கல்பட்டு மாவட்ட தலைநகரம், காஞ்சிபுரம் என அறிவித்தார். மாவட்ட நீதித்துறை தலைமையிடமாக செங்கல்பட்டு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, 1997 ஜூலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தை இரு மாவட்டங்களாக பிரித்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் என உருவாக்கப்பட்டன.

செங்கல்பட்டு அண்ணா, திருவள்ளூர் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சியில், செங்கல்பட்டு அண்ணா மாவட்டம், செங்கல்பட்டு எம்.ஜி.ஆர் மாவட்டமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டன.

பின், மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டமாக மாற்றப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட தலைநகரான காஞ்சிபுரம் வருவதற்கு, செங்கல்பட்டு சுற்றுவட்டார மக்கள் 90 கி.மீ., பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால், மாவட்டத்தை இரண்டாக பிரித்து, செங்கல்பட்டு மாவட்டமாக அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

கடந்த 2019 சட்டசபை கூட்டத்தில், 110 விதியின் கீழ், காஞ்சிபுரத்தை பிரித்து, செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என, அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன்பின், அதே ஆண்டு நவம்பர் 29ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது.

மாவட்ட முக்கிய திட்டங்கள்


கிளாம்பாக்கம் கலைஞர் நுாற்றாண்டு பேருந்து முனையத்தில், 6 ஏக்கர் பரப்பளவில் 12.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நீரூற்றுகளுடன் கூடிய பூங்கா பயன்பா்டடிற்கு கொண்டுவரப்பட்டது.

செங்கல்பட்டு, மலையடி வேண்பாக்கம் பகுதியில், புறநகர் பேருந்து நிலையம், 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பணிகள் நடைபெற்று வருகின்றன. மாமல்லபுரத்தில், 74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய பணி நடைபெற்று வருகிறது.

வரதராஜபுரம் - முடிச்சூர் பகுதியில், ஆம்னி பேருந்து நிலைய கட்டுமான பணிகளை, 42.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப்பணிகள் 1,517 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், தற்போது 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு 4,276.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பணி நடைபெற்று வருகிறது.

இப்பணி, 2027 பிப்ரவரி மாதம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால், சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் 22.6 லட்சம் மக்கள் பயனடைவர்.

சென்னைக்கு அருகே மறைமலைநகர் கடம்பூர் பகுதியில், புதிய தாவரவியல் பூங்கா உலக புகழ்பெற்ற லண்டன் க்யூ கார்டன் உடன் இணைந்து, 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

தாம்பரம் அரசு மருத்துவமனையை, 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில், மாவட்ட விளையாட்டு வளாகம், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பணி நடைபெற்று வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் மூலம் பணிபுரியும் பெண்களுக்கு, 'தோழி' விடுதிகள் கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

தாம்பரத்தில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 461 படுக்கை வசதி கொண்ட மகளிர் விடுதியும், கூடுவாஞ்சேரியில் 7.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 120 படுக்கை வசதி கொண்ட விடுதியும் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

செயின் தாமஸ் மவுன்டில், 12.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 144 படுக்கை வசதிகள் கொண்ட விடுதி கட்டப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் கிராமத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில், ஒருங்கிணைந்த பயிற்சி மையம் மற்றும் அரசு பாதுகாப்பு இல்லம் 42.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டடப் பணிகள் முடிந்து, திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.

முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் முடிக்கப்பட்டு, சுற்றுலா பயணியருக்கு பயன்பாட்டில் உள்ளது.

பெண்கள் முன்னேற்றம்

மகளிரின் தன்னம்பிக்கையை வளர்க்கும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் 3,08,170 மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வீதம் 585.52 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் 166 கல்லுாரிகளை சேர்ந்த 15,715 மாணவியருக்கு, மாதந்தோறும் 1,000 ரூபாய் வீதம் 1,57,15,000 ரூபாய் வழங்கப்பட்டு, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர். மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் 23.6 கோடி பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதற்கான செலவினத்தொகை 375.57 கோடி ரூபாய் ஆகும்.

மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்த 1,784 ஏழைப் பெண்களுக்கு தலா 25,000 ரூபாய் வீதம், 4.46 கோடி திருமண நிதியுதவியும், 7.36 கோடி ரூபாய் மதிப்பிலான 14.27 கிலோ கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது.

பட்டம் மற்றும் பட்டயம் படித்த 1,987 ஏழைப் பெண்களுக்கு தலா 50,000 ரூபாய் வீதம், 9.94 கோடி ரூபாய் திருமண நிதியுதவியும், 8.42 கோடி ரூபாய் மதிப்பிலான 15.90 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 4,535 குழந்தைகளுக்கு தலா 25,000 ரூபாய் வீதம் மொத்தம் 11.32 கோடி ரூபாய் மதிப்பில், தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில், சம்மந்தப்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் வைப்புத்தொகையாக செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 6,03,907 நபர்களுக்கு, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' திட்டத்தின் கீழ் இதுவரை, விபத்துக்குள்ளான நபர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சைகள் மேற்கோள்ளப்பட்டு 7,466 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதற்காக, 7.33 கோடி ரூபாய் செலவினம் மேற்கொள்ளப்பட்டது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில், 5,9925 பயனாளிகளுக்கு 88.88 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு சிகிச்சைகள் பெற்று பயனடைந்துள்ளனர்.

மாவட்டத்தில், ஒன்பது மருத்துவ கட்டடங்களுக்கு 160.09 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கி முடியும் நிலையில் உள்ளது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 102610 கர்ப்பிணி பெண்களுக்கு 18000 ரூபாய் வீதம், 184.69 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கல்வி

தமிழக முதலமைச்சரின் காலை உணவு த்திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில், நாளொன்றுக்கு சராசரியாக 39,532 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்காக, 3.84 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், 138 கல்லுாரிகளை சேர்ந்த 10,197 மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் என, தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மொத்தம் 10,1,97,000 ரூபாய் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

கூட்டுறவுத்துறை

நகை கடன்கள்

கடந்த 2021 - 22ம் நிதியாண்டில், கூட்டுறவுத் துறையின் மூலம் 63,153 பயனாளிகளுக்கு 416.94 கோடி ரூபாயும்; 2022 - 23ல், 1,08,936 பயனாளிகளுக்கு 681.97 கோடி ரூபாய்; 2023 - 24ல் 1,58,756 பயனாளிகளுக்கு 1,338.16 கோடி ரூபாய்; 2024 - 25ல் 1,54,556 பயனாளிக்கு 1,338.16 கோடி ரூபாய். 2021- 2022 முதல் 2024 - 25 வரை நகை கடன்கள் 4,85,400 பயனாளிகளுக்கு 3,693.88 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதர கடன்கள்

கடந்த 2021 - 22 முதல் 2024 - 25 வரை, 1,09,168 பயனாளிகளுக்கு 1,720.19 கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டது.

நகைக்கடன் தள்ளுபடி

நகைக்கடன் தள்ளுபடி திட்டம் 2021ன் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில், 16,338 பயனாளிகளுக்கு 78.97 கோடி ரூபாய் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

மகளிர் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி

மகளிர் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி திட்டம் 2021ன் கீழ், 12,633 பயனாளிகளுக்கு 29.89 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us