/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூர் சந்திப்பில் வேகத்தடை அமைப்பு
/
சித்தாமூர் சந்திப்பில் வேகத்தடை அமைப்பு
ADDED : டிச 07, 2024 12:57 AM
சித்தாமூர்,
சித்தாமூரில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மற்றும் செய்யூர் - போளூர் செல்லும், இரண்டு மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் முக்கிய சாலை சந்திப்பு உள்ளது.
இந்த சாலை சந்திப்பை, தினமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இப்பகுதியில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க, மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு சாலையில் இரண்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
கடந்த ஆண்டு செய்யூர் - போளூர் சாலை விரிவாக்க பணி நடத்த போது, சித்தாமூர் சாலை சந்திப்பும் விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்க பணியின் போது, சாலையில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன.
சில மாதங்களுக்கு முன், இந்த சாலைப் பணிகள் முடிந்த நிலையில், மீண்டும் வேகத்தடை அமைக்கப்படாததால், வாகனங்கள் அதிவேகமாக சென்று, இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன.
இதையடுத்து, இச்சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டுமென, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நான்கு சாலைகளிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பாக, வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.