/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கெட்டுப்போன தின்பண்டங்கள் தியேட்டர் கேன்டீன் உரிமம் ரத்து
/
கெட்டுப்போன தின்பண்டங்கள் தியேட்டர் கேன்டீன் உரிமம் ரத்து
கெட்டுப்போன தின்பண்டங்கள் தியேட்டர் கேன்டீன் உரிமம் ரத்து
கெட்டுப்போன தின்பண்டங்கள் தியேட்டர் கேன்டீன் உரிமம் ரத்து
ADDED : மார் 03, 2025 11:36 PM

சென்னை, எழும்பூர், ஆல்பர்ட் தியேட்டருக்கு மகளுடன் படம் பார்க்க சென்ற பெண், அங்குள்ள கேன்டீனில் குளிர்பானம் வாங்கி உள்ளார். அதை திறந்தபோது, சாராய வாசம் வீசியுள்ளது. கெட்டுப்போனது போன்றும் இருந்துள்ளது.
உடனே அந்த பெண், மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இதையறிந்த மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில் குமார், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமாரிடம் ஆல்பர்ட் தியேட்டரில் ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, டாக்டர் சதீஷ்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜா, மணிமுருகன் உள்ளிட்டோர் நேற்று தியேட்டரில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், கெட்டுப்போன 'பாப்கார்ன்' உட்பட 500 கிலோ தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குளிர்பானம் உட்பட மூன்று தின்பண்டங்களை ஆய்வுக்கு அனுப்பினர். மேலும், தியேட்டர் கேன்டீன் உரிமத்தை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் கூறுகையில், ''தியேட்டரின் கேன்டீன் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சில உணவு பொருட்கள் காலாவதி தேதி இல்லாமல் இருந்தன. வரும் நாட்களில், சென்னையில் உள்ள அனைத்து தியேட்டர்களின் கேன்டின்களிலும் ஆய்வு நடத்த உள்ளோம்.
''இங்கு, பூஞ்சை உள்ள உணவு பொருட்களை வைத்துள்ளனர். காலாவதியான பொருட்களை சேமித்து வைக்கக்கூடாது, அது தவறு,'' என்றார்.