/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒலிம்பிக் போட்டிக்கு மீண்டும் தகுதி எஸ்.ஆர்.எம்., மாணவி கவுரவிப்பு
/
ஒலிம்பிக் போட்டிக்கு மீண்டும் தகுதி எஸ்.ஆர்.எம்., மாணவி கவுரவிப்பு
ஒலிம்பிக் போட்டிக்கு மீண்டும் தகுதி எஸ்.ஆர்.எம்., மாணவி கவுரவிப்பு
ஒலிம்பிக் போட்டிக்கு மீண்டும் தகுதி எஸ்.ஆர்.எம்., மாணவி கவுரவிப்பு
ADDED : மே 02, 2024 01:27 AM

சென்னை:கடந்த ஒலிம்பிக் போட்டியில், பாய்மர படகு வீராங்கனையும் எஸ்.ஆர்.எம்., கல்லுாரி மாணவியுமான நேத்ரா குமணன் பங்கேற்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
அதைத்தொடர்ந்து, இந்தாண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று அசத்த கடும் பயிற்சியுடன் காத்திருந்தார். இந்த நிலையில், தகுதி தேர்வுக்கான போட்டிகள், பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிசில் நடந்தன. அதில் பங்கேற்று அசத்திய சென்னை வீராங்கனை நேத்ரா குமணன், பாரிசில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.
இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான நேத்ரா குமணனுக்கு, எஸ்.ஆர்.எம்., கல்லுாரி சார்பில், கிண்டியில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விழாவில், நேத்ரா குமணனுக்கு, கல்லுாரியின் நிறுவனர் பாரிவேந்தர், 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பேசுகையில், ''எஸ்.ஆர்.எம்., பல்கலையில், சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும், நீச்சல் குளத்தின் கேலரிக்கு நேத்ரா குமணன் பெயர் சூட்டப்படும்,'' என்றார். நிகழ்வில், வீராங்கனையின் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.