sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தமிழ் பேராயம் விருதுக்கு விண்ணப்பிக்க எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம் அழைப்பு

/

தமிழ் பேராயம் விருதுக்கு விண்ணப்பிக்க எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம் அழைப்பு

தமிழ் பேராயம் விருதுக்கு விண்ணப்பிக்க எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம் அழைப்பு

தமிழ் பேராயம் விருதுக்கு விண்ணப்பிக்க எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம் அழைப்பு

2


ADDED : ஏப் 30, 2024 10:22 PM

Google News

ADDED : ஏப் 30, 2024 10:22 PM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனத்தில், தமிழ்ப்பேராயம் செயல்பட்டு வருகிறது.

அதன் சார்பில், சிறந்த தமிழ் புத்தகங்கள், சிறந்த தமிழ் இதழ், சிறந்த தமிழ்ச்சங்கம், அறிஞர்கள் ஆகிய பிரிவுகளின் கீழ், 12 விருதுகள், 2012ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2024ம் ஆண்டுக்கான விருதுகள் பெற தகுதியான நபர்களிடமிருந்து, பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

விருதுகளுக்கு உரிய புத்தகங்கள், 2021 - 23ம் ஆண்டுகளில், முதல் பதிப்பகம் வெளி வந்திருக்க வேண்டும். 2024ம் ஆண்டு வந்த புத்தகங்கள் தகுதி பெறாது. தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கு, 20,000 வழங்கப்படும்.

தமிழிசை மற்றும் நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் குழுவுக்கு, அருணாசல கவிராயர் விருது வழங்கப்படும்.

பாரிவேந்தர் பைந்தமிழர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் தமிழறிஞர்கள், செய்த தமிழ் பணிகள், பெற்ற பட்டங்கள், எழுதிய நுால்களின் பட்டியல் உள்ளடக்கிய தகவல்களை பரிந்துரை கடிதத்துடன் அனுப்ப வேண்டும்.

இந்த விருதுக்கான பரிந்துரையை, உரியவரோ மற்றவர்களோ அனுப்பலாம். எந்த நாட்டை சேர்ந்த தமிழறிஞர்களும், மேற்கண்ட விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படாத புத்தகங்கள் திருப்பி அளிக்கப்படாது. தமிழ்பேராயத்தால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் முடிவே இறுதியானது.

பரிந்துரைகள் மற்றும் நுால்களை அனுப்ப வேண்டிய முகவரி: தலைவர், தமிழ் பேராயம், வேந்தர் கலையகம் முதல் தளம், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், காட்டாங்கொளத்துார். தொலைபேசி எண்: 044 -2741 7375/76.

மே 31ம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும் என, தமிழ்ப்பேராயம் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விருதுகள் விவரம்


1. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது - ரூ.1 லட்சம்
2. பாரதியார் கவிதை விருது -- ரூ.1 லட்சம்
3. அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - ரூ.1 லட்சம்
4. ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு விருது -- ரூ.1 லட்சம்
5. அப்துல்கலாம் அறிவியல் தமிழ் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு விருது - ரூ.1 லட்சம்
6. முத்துத்தாண்டவர் தமிழிசை விருது - ரூ.1 லட்சம்
7. பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது - ரூ.1 லட்சம்
8. முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூக நீதி விருது -- ரூ.1 லட்சம்
9. சுதேசமித்ரன் தமிழ் இதழ் விருது - ரூ.50,000
10. தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது - ரூ.50,000
11. அருணாச்சலக் கவிராயர் விருது -- ரூ.50,000
12. பாரிவேந்தர் பைந்தமிழர் விருது - ரூ.3 லட்சம்








      Dinamalar
      Follow us