/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எஸ்.ஆர்.எம்., அணிகள் பால் பேட்மின்டனில் முதலிடம்
/
எஸ்.ஆர்.எம்., அணிகள் பால் பேட்மின்டனில் முதலிடம்
ADDED : ஆக 10, 2024 12:06 AM

சென்னை : எஸ்.ஆர்.எம்., கல்லுாரியின் நிறுவனர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள், செங்கல்பட்டு, காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடந்து வருகிறது. பால் பேட்மிட்டன் போட்டியில், இருபாலரிலும், தலா 16 அணிகள் பங்கேற்றன.
இதில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில், ஆண்களில் எஸ்.ஆர்.எம்., பொறியியல் 30 - 35, 35 - 30, 35 - 22 என்ற 3 - 0 என்ற செட் கணக்கில், திருச்சி ஜமால் கல்லுாரியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது.
தொடர்ந்து, லயோலா மற்றும் பொள்ளாட்சி எஸ்.டி.சி., அணிகள் முறையே, மூன்று மற்றும் நான்காம் இடங்களை வென்றன.
அதேபோல், பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில், எஸ்.ஆர்.எம்., பொறியியல் அணி, 54 - 37 என்ற கணக்கில் சென்னை வேல்ஸ் அணியை தோற்கடித்து முதலிடத்தை கைப்பற்றியது.
தொடர்ந்து எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி மற்றும் வள்ளியமை அணிகள் அடுத்தடுத்த இடங்களை வென்றன.