/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செயின்ட் ஜோசப் கல்லுாரி வாலிபாலில் 'சாம்பியன்'
/
செயின்ட் ஜோசப் கல்லுாரி வாலிபாலில் 'சாம்பியன்'
ADDED : மே 10, 2024 01:48 AM

சென்னை, நொச்சி வாலிபால் கிளப் சார்பில், ஓபன் வாலிபால் போட்டியை, திருவள்ளூர் மாவட்டம், நொச்சிமேடு பகுதியில் உள்ள கிளப் மைதானத்தில் நடந்தது.
போட்டியில், பல்வேறு பகுதிகளில் இருந்து 65 அணிகள் பங்கேற்றன. 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன.
இத்தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய, செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி அணி, அரையிறுதியில் 27 - 25 என்ற புள்ளிக்கணக்கில் பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் அணியை தோற்கடித்தது.
இறுதிப் போட்டியில், செயின்ட் ஜோசப் கல்லுாரி மற்றும் ஐ.கியூ., ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. இதில், 30 - 27 புள்ளிக் கணக்கில் செயின்ட் ஜோசப் அணி வெற்றி பெற்று 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றியது.