ADDED : ஜூன் 22, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு : ஆலப்பாக்கம் ஊராட்சியில், வேதாநாராயணபுரம் குடியிருப்பு பகுதிகளில், மழைநீர் கால்வாய் இல்லாததால், சாலையில் மழைநீர் செல்வதால், அப்பகுதிவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனால், மழைநீர் கால்வாய் கட்ட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம், கோரிக்கை மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, மழைநீர் கால்வாய் கட்ட ஒன்றிய பொது நிதியில் இருந்து, 5 லட்சத்து 45,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, நேற்று பணி துவங்கி நடைபெற்று வருகிறது.