/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநில சதுரங்க ஆட்டம்; செங்கை சிறுவர்கள் அபாரம்
/
மாநில சதுரங்க ஆட்டம்; செங்கை சிறுவர்கள் அபாரம்
ADDED : செப் 09, 2024 11:53 PM

சென்னை : ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், மாநில சதுரங்க போட்டி, வண்டலுார் கிராண்ட் பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என, மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்து, 270 பேர் பங்கேற்றனர். இதில், 9, 13, 17 வயதுடைய இருபாலருக்கும், ஆறு சுற்றுகளாக போட்டி நடந்தது.
அனைத்து போட்டிகள் முடிவில், 9 வயது சிறுவர் பிரிவில், செங்கை இஷான் பாலாஜி, சிறுமியிரில் செங்கை தர்ஷிகா பத்மநாபன் ஆகியோர், முதலிடங்களை பிடித்தனர்.
அதேபோல் 13 வயதில், பிரிதிவ் மற்றும் ஜனனி; 17 வயதில் கவுதம் மற்றும் லீலா நந்தினி ஆகியோரும் முதலிடங்களை பிடித்து வெற்றி பெற்றனர்.
முதலிடத்தை பிடித்த அனைவரும், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு, கிளாம்பாக்கம் போலீஸ் எஸ்.ஐ., அலகு தண்டாயுதபாணி பரிசுகளை வழங்கினார். முதல் 20 இடங்கள் பிடித்த 120 பேருக்கு, கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.