/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநில சிலம்பம் 132 பேர் தேர்வு
/
மாநில சிலம்பம் 132 பேர் தேர்வு
ADDED : ஆக 12, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலை கழகத்தின் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி, ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று நடந்தது.
தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கழக மாநில தலைவர் ரேணுகோபால் தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு சிலம்பம் அகாடமியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இப்போட்டியில், 66 தங்கம், 66 வெள்ளி என, மொத்தம் 132 வீரர்கள் வெற்றி பெற்று பதக்கங்களை கைப்பற்றினர். இவர்கள், செப்., மாதம், கோவையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.