/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திரிபுரசுந்தரி அம்மன் திருத்தேரில் உலா
/
திரிபுரசுந்தரி அம்மன் திருத்தேரில் உலா
ADDED : ஆக 05, 2024 12:37 AM

திருக்கழுக்குன்றம்:ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்திபெற்றது.
இக்கோவில் அம்பாள் திரிபுரசுந்தரி அம்மன். அவருக்கு 10 நாட்கள் ஆடிப்பூரம் உற்சவம், கடந்த ஜூலை 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கப்பட்டது.
அம்பாளிற்கு தினசரி உற்சவம் நடந்து, வீதியுலா செல்கிறார். ஏழாம் நாள் உற்சவமாக, நேற்று திருத்தேரில் உலா சென்றார். காலை அம்பாளிற்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்து, திருத்தேரில் அலங்கார அம்மன் எழுந்தருளினார்.
காலை 6:15 மணிக்கு, திருத்தேர் மேள முழக்கத்துடன் நிலையிலிருந்து புறப்பட்டு, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சதுரங்கப்பட்டினம் சாலை, பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகள் வழியே உலா சென்ற அம்பாளை, பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். 8:15 மணிக்கு, தேர் மீண்டும் நிலையை அடைந்தது.