/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விடுதி மாடியிலிருந்து விழுந்த மாணவி பலி
/
விடுதி மாடியிலிருந்து விழுந்த மாணவி பலி
ADDED : மார் 06, 2025 10:37 PM
வண்டலூர்:வண்டலுாரில், பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்த பிளஸ் 1 மாணவி, சிகிச்சை பலனின்றி பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ரபீயா பேகம், 16. இவர், வண்டலுார் கிரசன்ட் பள்ளியில், விடுதியில் தங்கி பிளஸ் 1 படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் 12:45 மணியளவில், விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து தவறி, கீழே விழுந்துள்ளார். பள்ளி நிர்வாகத்தினர் மாணவியை, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின், மேல் சிகிச்சைக்காக, வேறு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரபீயா பேகம், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த கிளாம்பாக்கம் போலீசார், ரபீயா பேகம் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ரபியா பேகம் தற்கொலை செய்தாரா அல்லது மாடியிலிருந்து தவறி விழுந்தாரா என விசாரிக்கின்றனர்.