/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடலில் மூழ்கிய மாணவர்கள் மாமல்லையில் சடலமாக மீட்பு
/
கடலில் மூழ்கிய மாணவர்கள் மாமல்லையில் சடலமாக மீட்பு
கடலில் மூழ்கிய மாணவர்கள் மாமல்லையில் சடலமாக மீட்பு
கடலில் மூழ்கிய மாணவர்கள் மாமல்லையில் சடலமாக மீட்பு
ADDED : செப் 01, 2024 03:57 AM
மாமல்லபுரம் : அயனாவரத்தைச் சேர்ந்த ரோஷன், 21, சேத்துப்பட்டு கவுதம், 19, திண்டிவனம் பிரகாஷ், 19, ஆகியோர், சென்னை அண்ணா நகர் தனியார் கலை, அறிவியல் கல்லுாரியில் பி.காம்., இறுதியாண்டு மாணவர்கள்.
மூவரும், கல்லுாரி நண்பர்களுடன் நேற்று முன்தினம், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். கிழக்கு கடற்கரை சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி அருகில், கடலில் குளித்தபோது, மேற்கண்ட மூன்று பேரும் அலையில் சிக்கி மூழ்கினர்.
நண்பர்கள், ரோஷனை மீட்டு, மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி செல்லும் வழியில் இறந்தார்.
மற்ற இரண்டு பேர் மாயமாகினர். போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், நேற்று காலை 8:30 மணிக்கு, பட்டிபுலம் கடற்கரையில் கவுதம் சடலம், 9:30 மணிக்கு, சூலேரிக்காடு கடற்கரையில் பிரகாஷ் சடலம் கரை ஒதுங்கின. மாமல்லபுரம் போலீசார் அவற்றை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.