/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் கோடை கால விளையாட்டு பயிற்சி துவக்கம்
/
செங்கையில் கோடை கால விளையாட்டு பயிற்சி துவக்கம்
ADDED : மே 01, 2024 10:45 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட அளவிலான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம், வரும் 13ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், கோடைகால பயிற்சி முகாமை, கடந்த 29ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
இதில், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரியில், தடகளம், கால்பந்து, கபடி, வாலிபால் ஆகிய போட்டிகளும், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கூடைபந்து போட்டிகளும், காலை 6:30 மணியிலிருந்து 8:00 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் மாலை 6:30 மணி வரையும் நடக்கின்றன.
இப்பயிற்சி முகாமில் பங்கேற்க, பயிற்சி கட்டணம் 200 என, ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், 18 வயதிற்குட்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். பயிற்சி முடிந்தவுடன், சான்றிதழ் வழங்கப்படும்.
விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர் - வீராங்கனையர் அதிக அளவில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின், 74017 03461 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

