/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை தீயணைப்பு நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
/
மாமல்லை தீயணைப்பு நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
மாமல்லை தீயணைப்பு நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
மாமல்லை தீயணைப்பு நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
ADDED : ஆக 29, 2024 01:31 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், சிற்பங்களை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணியர், கடலில் ஆர்வமாக குளிக்கின்றனர். அவர்கள் அலையில் சிக்கினால், விரைந்து மீட்க இயலவில்லை.
தீ விபத்து ஏற்படும் போது தீயை அணைக்கவும், பிற மீட்பிற்காகவும், மாமல்லபுரத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படாததால், வேறிடத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வர தாமதம் ஏற்பட்டது. சுற்றுலா பகுதி கருதி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்க வேண்டும் என, நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசும் பரிசீலித்து, கடந்த 2020ல், தீயணைப்பு நிலையம் அமைத்தது. மாமல்லபுரம் சுற்றுப்புறத்தில் 10 கி.மீ., தொலைவு, இதன் எல்லையாக வரையறுக்கப்பட்டது.
துவக்கத்தில், மாமல்லபுரம் போலீஸ் நிலையம் அருகில், தனியார் கட்டடத்தில் துவக்கப்பட்டது. தற்போது, ஓராண்டிற்கும் மேலாக, நகர்ப் பகுதியிலிருந்து, 2.5 கி.மீ., தொலைவில் உள்ள வெண்புருஷம், பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் இயங்குகிறது.
குறுகிய கட்டடத்தில், இடவசதி, பிற கட்டமைப்புகள் இல்லை. அவசர காலத்தில், தீயணைப்பு வாகனம் எளிதாக செல்ல இயலாது. அரசு இடம் அளித்தால் தான், நிரந்தர கட்டடம் அமைக்கப்படும்.
நிரந்தர இடத்திற்கு வலியுறுத்தியும், தற்போது வரை அளிக்கவில்லை. அதே கட்டடத்தில் நீடிக்கும் நிலையில், பாதுகாப்பு கருதி, தற்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அணுசக்தி தொழில் வளாகம் அருகில் இயங்கும் இந்நிலையத்தில், கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், அப்பகுதியில் அன்னியர் நடமாட்டத்தை கண்காணிக்கவும் பயன்படும் என, அப்பகுதிவாசிகள் கூறினர்.