/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம் - வண்டலுார் பாதை இன்று திறப்பு
/
தாம்பரம் - வண்டலுார் பாதை இன்று திறப்பு
ADDED : ஜூலை 31, 2024 11:38 PM
பெருங்களத்துார் : பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில், தாம்பரம் - வண்டலுார் மார்க்கமான பாதை இன்று மாலை பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.
சென்னை- --- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகில், 234 கோடி ரூபாய் செலவில், மாநில நெடுஞ்சாலை- ரயில்வே நிர்வாகம் இணைந்து, 2019ல் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.
இத்திட்டத்தில், முதல் கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார்- - தாம்பரம் மார்க்கமான பாதை, 2022ல் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, புதுபெருங்களத்துார், சீனிவாசா நகர் வழியாக இறங்கும் பாதையும் திறக்கப்பட்டது.
அடுத்தக்கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் மார்க்கமான பணிகள் நடந்து வந்தன. இப்பணிகள் முடிந்து பாதை திறப்புக்கு தயாராக இருந்தது.
இந்நிலையில், அமைச்சர் அன்பரசன் இன்று மாலை 5:00 மணிக்கு, இப்பாதையை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். 1 கி.மீ., நீளம் கொண்ட இப்பாதை திறக்கப்பட்டால், பெருங்களத்துாரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.