/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு
/
அரசு பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு
ADDED : மே 04, 2024 09:54 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், புத்தாகரம் பகுதியைச் சேர்ந்தவர் நிஜந்தன், 23. இவர், ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுங்குவார்சத்திரம் சென்ற நிஜந்தன், 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனம் மூலம், சுங்குவார்சத்திரத்தில் இருந்து, வாலாஜாபாத் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது, கட்டவாக்கம் கூட்டுச்சாலை அருகே வந்தபோது, காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அரசு பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த நிஜந்தன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் போலீசார், நிஜந்தன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.