/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் பள்ளி பஸ் மோதி வாலிபர் படுகாயம்
/
தனியார் பள்ளி பஸ் மோதி வாலிபர் படுகாயம்
ADDED : மார் 06, 2025 10:35 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த சோகண்டி கிராமத்தில், தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
நேற்று காலை, இந்த பள்ளியின் பேருந்து, கொண்டமங்கலம் கிராமத்தில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு, திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையில் சென்றது.
பள்ளி பேருந்தை, திம்மாவரம் பகுதியைச் சேர்ந்த மோகன்,46, என்பவர் ஓட்டினார்.
திருவடிசூலம் பகுதியில் பேருந்து சென்ற போது, முன்னே 'பஜாஜ் பல்சர்' பைக்கில் சென்ற, செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்,25, என்பவர் மீது மோதியது. இதில், அவர் படுகாயம் அடைந்தார்.
அங்கிருந்தோர் சஞ்சயை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து ஏற்படுத்திய பள்ளி பேருந்தை மடக்கிய சக வாகன ஓட்டிகள், ஓட்டுநர் மோகனை சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், மோகனை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து அவரிடம் விசாரிக்கின்றனர்.