/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மையத்தடுப்பு கம்பத்தில் மின்கசிவு மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
/
மையத்தடுப்பு கம்பத்தில் மின்கசிவு மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
மையத்தடுப்பு கம்பத்தில் மின்கசிவு மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
மையத்தடுப்பு கம்பத்தில் மின்கசிவு மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
ADDED : ஆக 15, 2024 11:38 PM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த இனையதுல்லா மகன் ஜூபேர் அலி, 17. இவர், நேற்று முன்தினம் இரவு, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் மார்க்கத்திலிருந்து, சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, சாலையின் மைய தடுப்பில் அமைக்கப்பட்டிருந்த, துருப்பிடிக்காத இரும்பிலான மின்விளக்கு கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் பரவி இருந்துள்ளது.
இதனை அறியாத ஜூபேர் அலி, மின் கம்பத்தை தொட்டுள்ளார். அதனால், கையில் மின்சாரம் பாய்ந்ததில் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே ஜூபேர் அலி உயிரிழந்தார்.
இதுகுறித்து, அப்பகுதியினர் அச்சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுவன் உடலை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று, உடற்கூறாய்வு முடிந்து, சிறுவன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து, அச்சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.