/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலம் சேதமாகி சாலையில் பள்ளம் புதுப்பட்டு அருகே விபத்து அபாயம்
/
பாலம் சேதமாகி சாலையில் பள்ளம் புதுப்பட்டு அருகே விபத்து அபாயம்
பாலம் சேதமாகி சாலையில் பள்ளம் புதுப்பட்டு அருகே விபத்து அபாயம்
பாலம் சேதமாகி சாலையில் பள்ளம் புதுப்பட்டு அருகே விபத்து அபாயம்
ADDED : பிப் 28, 2025 11:46 PM

மதுராந்தகம், மதுராந்தகத்திலிருந்து நெல்வாய் வழியாக, உத்திரமேரூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையை புழுதிவாக்கம், வேடந்தாங்கல், நெல்வாய், சூரை, புதுப்பட்டு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்கள், தினமும் பயன்படுத்தி வருகின்றன.
போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில், புதுப்பட்டு கிராமம் அருகே, சன் பார்மா தொழிற்சாலைக்கு அடுத்து, சிறிய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் அடிப்பகுதி உள்ளுக்குள் சேதமடைந்த காரணத்தால், தார் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
துவக்கத்தில் சிறிய அளவில் காணப்பட்ட இந்த பள்ளம், வாகனங்கள் சென்று வருவதால், வேகமாக பெரிய அளவில் விரிவடைந்து வருகிறது.
சாலையில் பள்ளம் உள்ளதை வாகன ஓட்டிகளுக்கு சுட்டிக்காட்டும் வகையில், தற்போது பள்ளத்தில் மரக்கிளையை வைத்து எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.
எனவே, பள்ளம் பெரிதாகி பெரும் விபத்து ஏற்படும் முன், நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, இந்த பகுதியில் புதிய பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.