ADDED : ஆக 09, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - நெல்லிக்குப்பம் சாலை, கோவிந்தராஜபுரத்தில் வசித்து வருபவர் சங்கர நாராயணமூர்த்தி, 64. இவர், ஓய்வுபெற்ற போலீஸ்காரர். இவரின் மனைவி செல்லம்மாள், 60.
நேற்று முன்தினம், செல்லம்மாள் நெல்லிக்குப்பம் சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், வீட்டு முகவரி கேட்பது போல் நடித்து, செல்லம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்து, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில், செல்லம்மாள் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.