/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூரில் ஜமாபந்தி நிறைவு விழா 164 பேருக்கு பட்டா வழங்கிய கலெக்டர்

ADDED : ஜூன் 21, 2024 01:48 AM

திருப்போரூர்:திருப்போரூர் தாலுகாவில் நேற்று நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில், கலெக்டர் அருண்ராஜ், 164 பேருக்கு பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில், ஆறு குறுவட்டங்களுக்கான ஜமாபந்தி, கடந்த 12ம் தேதி துவங்கி நேற்றுநிறைவடைந்தது. இதில் பங்கேற்ற அப்பகுதிவாசிகள், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உட்பட வருவாய்த்துறை சார்ந்த கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
ஜமாபந்தி நிறைவு விழாவில், கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகித்தார். சப் - கலெக்டர் நாராயணசர்மா, தாசில்தார் வெங்கட்ரமணன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
திருப்போரூர் விசி., - எம்.எல்.ஏ., பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் ஆகியோர் பங்கேற்று சிறப்புறைஆற்றினர்.
ஜமாபந்தியில், மொத்தம் 630 மனுக்கள் பெறப்பட்டன. அதில், 164 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.
மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேலாயுதம், மண்டல துணை தாசில்தார் ஜீவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.