/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி புதுமாம்பாக்கம் பகுதியில் விறுவிறு

ADDED : மே 09, 2024 12:53 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி, 23வது வார்டுக்குட்பட்ட புதுமாம்பாக்கம், மாரியம்மன் கோவில் பகுதியில், கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மதுராந்தகத்திலிருந்து சித்தாமூர் வழியாக சூணாம்பேடு, செய்யூர் பகுதி களுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இதில், 23வது வார்டுக்குட்பட்ட மாம்பாக்கம், புதுமாம்பாக்கம் பகுதியில், நெடுஞ்சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் வசதியின்றி, திறந்தவெளியில் கழிவுநீர் சென்றதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.
கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் அமைத்து தர, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் விளைவாக, தற்போது, 15வது நிதி குழு திட்டத்தின் கீழ், 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 182 மீட்டர் நீளத்திற்கு, திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.