/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்லுாரி செல்லும் முதல் மாணவி ஆரத்தி எடுத்து இருளர்கள் வாழ்த்து
/
கல்லுாரி செல்லும் முதல் மாணவி ஆரத்தி எடுத்து இருளர்கள் வாழ்த்து
கல்லுாரி செல்லும் முதல் மாணவி ஆரத்தி எடுத்து இருளர்கள் வாழ்த்து
கல்லுாரி செல்லும் முதல் மாணவி ஆரத்தி எடுத்து இருளர்கள் வாழ்த்து
ADDED : ஜூலை 04, 2024 12:50 AM

திருப்போரூர்:திருப்போரூர் அருகே பெரிய இரும்பேடு கிராமத்தில், யுரேகா இருளர் பகுதியில், 76 குடும்பங்கள் உள்ளன.
இப்பகுதியைச் சேர்ந்த விஜயன்- - தீபா தம்பதியின் மூத்த மகள் நதியா. இவர், திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வில் 361 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
மேல்படிப்புக்காக, செங்கல்பட்டு அரசு கலைக் கல்லுாரியில் முயற்சி செய்தபோது, பி.ஏ., அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
அப்பகுதியில், கல்லுாரி செல்லும் முதல் மாணவியான நதியா, நேற்று கல்லுாரிக்கு புறப்பட்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த இருளர் பழங்குடி இன மக்கள், மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
இப்பகுதியில், இந்திய வளர்ச்சி கழகம் அமைப்பு வாயிலாக, பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன. கல்வி மையம் ஏற்படுத்தி, இங்குள்ள குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகிறது.
இந்த பகுதியிலிருந்து முதல் மாணவியாக நதியா கல்லுாரி செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. எனினும், விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.