/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடற்கரை கோவிலை ரசித்த மெக்சிகோ நாட்டு கவர்னர்
/
கடற்கரை கோவிலை ரசித்த மெக்சிகோ நாட்டு கவர்னர்
ADDED : ஆக 05, 2024 12:41 AM

மாமல்லபுரம்:அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தின் கவர்னரான மிசெல்லே லுஜன் கிரிஷாம், அந்நாட்டு அரசு உயரதிகாரிகள் குழுவினருடன், உயர்கல்வி, வர்த்தகம் உள்ளிட்ட ஆலோசனைக்காக, இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில், அரசுத் துறை குழுவினர், கணவர் ஆகியோருடன், நேற்று மாமல்லபுரம் வந்தார். அங்குள்ள கடற்கரை கோவிலை கண்டு ரசித்தார்.
பல்லவர்கள், சைவ, வைணவ வழிபாட்டிற்காக, அதை உருவாக்கியது, ஆறு கோவில்கள் கடலில் மூழ்கியது, பல்லவர்களின் துறைமுகமாக விளங்கியது, பழங்காலத்தில் பக்தர்கள் வழிபட்டு, தற்காலத்தில் பாரம்பரிய நினைவுச்சின்னமாக பராமரிக்கப்படுவது உள்ளிட்ட வரலாற்று தகவல்களை, வழிகாட்டி அவரிடம் விளக்கினார்.
அவற்றைக் கேட்டு வியந்த அவர், தன் மொபைல் போனில் கணவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சுற்றுலா பயணியரும் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.