/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'ஓலா' ஓட்டுனரை தாக்கி கார் பறிக்க முயன்றவர் கைது தப்பி ஓடியவருக்கு வலை
/
'ஓலா' ஓட்டுனரை தாக்கி கார் பறிக்க முயன்றவர் கைது தப்பி ஓடியவருக்கு வலை
'ஓலா' ஓட்டுனரை தாக்கி கார் பறிக்க முயன்றவர் கைது தப்பி ஓடியவருக்கு வலை
'ஓலா' ஓட்டுனரை தாக்கி கார் பறிக்க முயன்றவர் கைது தப்பி ஓடியவருக்கு வலை
ADDED : செப் 17, 2024 09:16 PM
மதுராந்தகம்,:கடலுார் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த முகமது சல்மான், 20, மற்றும் முகமது தவ்பீக், 27, ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்ல, ஓலா' கார் பதிவு செய்தனர்.
அதன்படி வந்த காரில் ஏறி, இருவரும் செங்கல்பட்டு சென்றனர். ஓலா நிறுவன காரை, விழுப்புரம் மாவட்டம், மானுார் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 30, என்பவர் இயக்கினார்.
அப்போது, மாமண்டூர் பாலாற்று பாலம் வரை அழைத்துச் சென்று விடும்படி, ஜெயச்சந்திரனிடம் பயணியர் இருவருக் கூறியுள்ளனர். அதன்படி அங்கு சென்ற ஜெயசந்திரன், அவர்களை இடம் வந்துவிட்டதாகக் கூறி, இறங்கச் சொல்லியுள்ளார்.
ஆனால், முகமது சல்மான், முகமது தவ்பீக் இருவரும், பாலாற்று பாலத்தை கடந்து இறக்கிவிடும்படி வற்புறுத்தியுள்ளனர். அதன்படி, பாலத்தை கடந்து வந்து, ஜெயசந்திரன் காரை நிறுத்தியுள்ளார்.
அப்போது, காரில் இருந்தவர்கள், ஜெயச்சந்திரனிடம் வேண்டுமென்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின், ஜெயசந்திரனை அசிங்கமாக பேசிய அவர்கள், அவரை கீழே தள்ளி விட்டு, காரை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.
உடனே, காவல் கட்டுப்பட்டு அறையை தொடர்பு கொண்ட ஜெயசந்திரன், போலீசாரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அதன்படி, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த படாளம் போலீசாருக்கு, உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற படாளம் போலீசார், மாமண்டூர் பகுதியில் வழி தெரியாமல், பாலாற்று பகுதிக்கு செல்லும் முட்டுச்சந்து பகுதியில் கார் நிற்பதை கண்டனர்.
போலீசார் வருவதை அறிந்த முகமது சல்மான், முகமது தவ்பீக் இருவரும், காரை விட்டு இறங்கி தப்பிக்க முயன்றனர். ஆனால், முகமது சல்மான் மட்டும் போலீசாரிடம் பிடிபட்டார்.
பின், வழக்கு பதிவு செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், மதுராந்தகம் கிளைச் சிறையில் முகமது சல்மானை அடைத்தனர். தப்பியோடி தலைமறைவாக உள்ள முகமது தவ்பீக்கை, போலீசார் தேடி வருகின்றனர்.