/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனைவியை பயமுறுத்த துாக்கிட்டவர் உயிரிழப்பு
/
மனைவியை பயமுறுத்த துாக்கிட்டவர் உயிரிழப்பு
ADDED : மே 13, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி : ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், தென்றல் நகர் கிழக்கு ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன், 38. இவரது மனைவி வள்ளி, 31, வீட்டில் தையல் வேலை செய்கிறார்.
மது போதைக்கு அடிமையான பாண்டியன், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தியபடி, வீட்டில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினமும் மது அருந்தி வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின், படுக்கை அறைக்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது போல் நடித்துள்ளார்.
ஆனால், சிறிது நேரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் பாண்டியன் இறந்து கிடந்துள்ளார்.
திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.